உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்பதற்கான நீட் நுழைவுத் தேர்வின் கட் ஃஆப் மதிப்பெண் பூஜ்ஜியம் என குறைக்கப்பட்டுள்ளது.
DM மற்றும் MCh போன்ற சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் சேருவதற்கு உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் பங்கேற்று இருந்தால் போதும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் குறிப்பிட்டு உள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் கூறியுள்ளது.
காலியாக உள்ள ஆயிரம் உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான இடங்களை நிரப்பவே தற்போது கட் ஃஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது.