அயோத்தியில் பிராண பிரதிஷ்டை நடைபெற்ற அதே வேளையில், ஒடிஷா மாவட்டத்தில் புதிதாக ராமர் ஆலயம் ஒன்று திறக்கப்பட்டது.
நயாகர் மாவட்டம் பதேகர் கிராமத்தில் கடல் மட்டத்தில் இருந்து 1800 அடி உயரத்தில் மலை உச்சி ஒன்றில் அக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒடியா கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ள இக்கோயிலின் கருவறை சுமார் 65 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
பிரதான கோயிலை சுற்றி சூரிய கடவுள், சிவன், விநாயகர் மற்றும் அனுமனுக்கு தனித்தனி சன்னதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.