நாடாளுமன்ற உறுப்பினராக பதவி நீக்கம் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஹுவா மொய்த்ரா, டெல்லியில் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவை காலி செய்தார்.
இவர் நாடாளுமன்றத்தில் அதானி குழுமத்தையும், பிரதமர் மோடியையும் தொடர்புப்படுத்தி கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
இது குறித்து நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்து தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைத்ததை அடுத்து மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து டெல்லியில் உள்ள அரசு வீட்டை காலி செய்ய அவருக்கு மக்களவை செயலகம் நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு எதிராக, அவர் தொடர்ந்த வழக்கையும் டில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.