குஜராத்தில் டிசம்பர் 30ஆம் தேதி முதல் ஜனவரி 15ஆம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டு மலர் கண்காட்சியை காண லட்சக்கணக்கான மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அகமதாபாத் மாநகராட்சி சார்பில் சபர்மதி ஆற்றின் கரையோரத்தில் 400 மீட்டர் நீளத்தில் 7 லட்சம் பூச்செடிகள் கொண்டு மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற புதிய கட்டிடம், விக்ரம் லேண்டர், ஒற்றுமையின் சிலை, மோதேராவின் சூரியக் கோயில், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் சின்னங்கள் போன்ற அடையாளங்களைச் சித்தரிக்கும் வகையில் பூக்களை கொண்டு செய்யப்பட்ட சிற்பங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.