தீவிரவாதத்திற்கு ஆதரவான பாகிஸ்தானின் அரசுக் கொள்கையை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம் செய்துள்ளார்.
எல்லைத்தாண்டிய தீவிரவாதத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தியாவை பேச்சுவார்த்தைக்குப் பணிய வைக்க முடியும் என்று பாகிஸ்தான் திட்டமிட்டதாகவும், ஆனால் அத்திட்டத்தை இந்தியா திறம்பட முறியடித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் காலிஸ்தான் பயங்கரவாதிகளைப் பற்றியும் குறிப்பிட்ட ஜெய்சங்கர் இந்தியா-கனடா அரசுமுறை உறவுகளை சிதைக்கும் அளவுக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு வெளிநாடுகளில் இடம் கிடைத்திருக்கிறது என்றார்.