பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு வரவேண்டும் என்று அந்நாட்டு அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். ஐந்துநாள் பயணமாக மாஸ்கோ சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அதிபர் விளாடிமிர் புதினை கிரம்ளின் மாளிகையில் சந்தித்துப் பேசினார். அப்போது குறிப்பிட்ட புதின், தமது நண்பரான மோடியை சந்திக்க ஆவலாக இருப்பதாக குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பின்போது, கூடங்குளத்தில் புதிய அணு உலைகள், பாதுகாப்பு உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இருதரப்பு நல்லுறவு மற்றும் வர்த்தக நலன்களும் இந்தப் பேச்சுவார்த்தையில் இடம் பெற்றன. கச்சா எண்ணெய், தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட வர்த்தகத்தில் இந்தியாவின் கொள்முதல் அதிகரித்துள்ளதாக புதின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.