புஷ்-புல் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் அம்ரித் பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்க உள்ள நிலையில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லி ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அம்ரித் பாரத் ரயிலில் உலகத் தரத்திலான கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
800 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நகரங்களை இணைக்கும் வகையில் இரவும் பகலுமாக இந்த ரயில் இயக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புஷ்-புல் தொழில்நுட்பத்தில் ரயில்களை விரைந்து உந்தச் செய்யவும், நிறுத்தவும் முடியும். வளைவுகள், பாலங்கள் இருக்கும் இடங்களில் நேரத்தை மிச்சப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.