ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் 4 வீரர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதையடுத்து நான்காவது நாளாக இன்று தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
வனத்தில் மூன்று கிராமவாசிகளின் சடலங்களையும் ராணுவம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் ரஜோரி பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரவாதிகளை விரட்டி விரட்டி ராணுவம் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளது.
தீவிரவாதிகளுடன் சண்டை நீடிப்பதால் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.