இந்திய விமானப்படை உலக நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு வளர்ந்து வருவதாக விமானப் படைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி தெரிவித்தார்.
டெல்லியில் கருத்தரங்கம் ஒன்றில் பேசிய அவர், இந்தியாவின் உள்நாட்டு போர் தளவாட உற்பத்தி வளர்ச்சியால் ஏற்றுமதிக்கான கதவும் திறந்திருப்பதாக கூறினார்.
இலகுரக போர் விமானங்கள், இலகுரக ஹெலிகாப்டர்கள், ஆகாஷ் ஏவுகணை போன்றவற்றால் இந்திய விமானப்படையின் நம்பகத்தன்மை அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 9 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரம் வீரர்களுக்கு இந்திய விமானப்படை பயிற்சி அளித்திருப்பதாகவும், இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் சவுத்ரி கூறினார்.