கேரளாவில் தினசரி கோவிட் பாதிப்புகளின் எண்ணிக்கை 500ஐத் தாண்டியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கோவிட் ஜே.என்.1 திரிபு பரவலையடுத்து அனைத்து மாநில அரசுகளும் பரிசோதனைகளை அதிகரிக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
டெல்லி, நொய்டா, சண்டிகர், டேராடூன் உள்ளிட்ட இடங்களில் நோய் அறிகுறி இருப்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.