ஐ.பி.சி எனப்படும் இந்திய தண்டனைச் சட்டத்துக்கு பதிலாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள பாரதிய நியாய சன்ஹிதாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கும் வகையிலும் தேச விரோத செயலில் ஈடுபடுவோரை தண்டிக்கவும் 20 புதிய குற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
18 வயதுக்கு குறைந்தவர்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவோருக்கும், கூட்டமாக சேர்ந்து யாரையாவது அடித்துக் கொல்பவர்களுக்கு குற்றத்தின் தீவிரத்தை பொருத்தும் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க புதிய சட்டம் வகை செய்கிறது.
ஐயாயிரம் ரூபாய்க்கு குறைவான திருட்டு மற்றும் வேறு 5 சிறு குற்றங்களுக்கு தண்டனையாக கட்டாய சமூக சேவை செய்ய வைக்கும் ஷரத்தும் முதன்முறையாக இடம் பெற்றுள்ளது. புதிய சட்டப்படி, ஓரினச் சேர்க்கை மற்றும் திருமணத்தை மீறிய உறவுகள் இனி குற்றங்களாக கருதப்படாது.
தற்கொலை என்பதும் இனி கிரிமினல் குற்றமாக கருதப்படாது. நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களுக்கு எதிராக கடும் தண்டனை விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.