தொலைத் தொடர்பு மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 13ம் தேதி இந்த மசோதாவை தொலைத் தொடர்பு அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தாக்கல் செய்தார்.
தொலைத் தொடர்பு சேவைகள், நெட்வொர்க் மற்றும் ஸ்பெக்ட்ரம் தொடர்பான சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பான இணைய சேவை மற்றும் தொலைத் தொடர்பு சேவையை இந்த புதிய மசோதா உறுதி செய்வதாக நேற்று அஸ்வின் வைஷ்ணவ் குறிப்பிட்டார்.
போலியான சிம்கார்டுகள் விநியோகத்திற்கு 3 ஆண்டுகள் வரை அபராதத்துடன் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
சமூகப் பொருளாதார மாற்றங்களுக்கு முக்கிய காரணமாக விளங்கும் டிஜிட்டல் சேவை மற்றும் பாதுகாப்புக்கு புதிய சட்டம் முன்னிலை அளித்திருப்பதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.