நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அவமதிக்கப்பட்டது வருத்தம் அளிப்பதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார்.
எம்.பி.க்கள் டிஸ்மிஸ் விவகாரம் தொடர்பாக நடந்த போராட்டத்தின் போது திரிணாமுல் எம்.பி. கல்யாண் பானர்ஜியின் செயல்பாட்டை சுட்டிக்காட்டி அவர் வெளியிட்டுள்ள கருத்துப்பதிவில், மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்தும் அதே வேளையில், அது கண்ணியத்துடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி வேதனையை பகிர்ந்து கொண்டதாக கூறியுள்ள ஜக்தீப் தன்கர், கடந்த 20 ஆண்டுகளாக இது போன்ற அவமானங்களை தாமே எதிர்கொண்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.
தனது கடமையைச் செய்வதை இதுபோன்ற அவமரியாதைகள் மூலம் தடுக்க முடியாது என்று பிரதமரிடம் தாம் கூறியதாகவும் தன்கர் தெரிவித்துள்ளார். இதனிடையே, யாரையும் புண்படுத்தும் நோக்கில் தாம் செயல்படவில்லை என கல்யாண் பானர்ஜி விளக்கமளித்துள்ளார்.