இஸ்ரேல் நாட்டுக்காக 10 ஆயிரம் திறன்மிகு தொழிலாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஹரியாணா மாநில அரசு விளம்பரம் வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் போராளிகளுடனான போர் காரணமாக, இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் கடும் மனிதவளத் தட்டுப்பாடு நிலவுவதால் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாவது என்றும், மாதம் ஒரு லட்சத்துக்கு 34 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்றும், கட்டுமானம், மர வேலை, சிமெண்ட் பூச்சு, டைல்ஸ் ஒட்டுதல் போன்ற பணிகளில் மூன்று ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த 25 வயது முதல் 54 வயது வரை உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாநிலத்தில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து ஏற்கெனவே விமர்சனம் எழுந்துள்ள நிலையில், மாநில அரசே வெளிநாடு ஒன்றுக்காக ஆள்களைத் தேர்ந்தெடுப்பது குறித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.