ஒடிசாவில் தமது இல்லத்தில் இருந்து 350 கோடி ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்து ஜார்க்கண்ட் மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் பிரசாத் சாகு விளக்கம் அளித்துள்ளார்.
இந்தப் பணம் தமது சகோதரருக்கு சொந்தமானது என்றும் மது கொள்முதல், வியாபாரத்துக்காக வைக்கப்பட்டிருந்ததாகவும் தீரஜ் தெரிவித்துள்ளார்.
வருமான வரித்துறையினர் இது கருப்புப் பணமா இல்லை வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்ட பணமா என்று தெரிவிக்க வேண்டும் என்றும் தீரஜ் கூறியுள்ளார்