ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மற்றும் இட ஒதுக்கீடு தொடர்பான இரண்டு மசோதாக்களும் மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
சட்டப்பிரிவு 370 ரத்து குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பில் தேர்தல்நடத்தும்படி நீதிமன்றம் மத்திய அரசுக்கு வலியுறுத்தியதை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சியினர், காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கவும் கோரிக்கை விடுத்தனர்.
விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, இந்த இரு மசோதாக்களும் காஷ்மீரில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் என்றார்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியதும் மசோதாக்கள் நிறைவேறுவதும் காஷ்மீர் மக்களுக்கு இரட்டிப்பு பலன்கள் தரும் என்றும் இந்நாள் பொன்னேடுகளில் எழுதப்படும் நாளாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேருவின் தவறால்தான் பாகிஸ்தான் காஷ்மீரின் ஒருபகுதியை ஆக்ரமிப்பு செய்துள்ளதாக மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய அமித்ஷா, ஆக்ரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்கு சொந்தம் என்று தெரிவித்தார்