வரும் 2024ம் ஆண்டு மார்ச் 31 வரை வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
அடிக்கடி வெங்காயம் விலை ஏறுவதாலும் உற்பத்தி குறைவதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலையைக் கட்டுக்குள் வைக்கவும் தடையின்றி வெங்காயம் சந்தைகளில் கிடைக்கவும் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்த நிலையில் விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திவருகின்றனர்.
மகாராஷ்ட்ராவில் உள்ள சந்தைகளில் வெங்காயம் கொள்முதலுக்கான ஏலம் காலவரையறை இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளது.இதனால் வெங்காய வரத்து குறைய வாய்ப்புள்ளது.
இதனிடையே மும்பை ஆக்ரா நெடுஞ்சாலையை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், ஏற்றுமதி தடையால் தங்கள் வருமானம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.