திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த மஹுவா மொய்த்ரா மக்களவை எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றது தொடர்பான மஹுவா மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்திய மக்களவை நெறிமுறைக் குழு, மஹுவாவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதை கண்டிப்பதாகக் கூறி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அவை மீண்டும் கூடிய போது தனது தரப்பு கருத்தை முன்வைக்க மஹுவாவும் அவருக்கு ஆதரவாக எதிர்க்கட்சியினரும் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு மத்தியில், மஹுவாவின் செயல்பாடு அறமற்றது, அநாகரிகமானது மற்றும் அவையின் மாண்பை சிதைக்கும் வகையில் உள்ளது என்று கூறி, அவர் பதவி நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். ((GFX OUT))
இதனைத் தொடர்ந்து சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த மஹுவா, தன் மீதான எந்த ஒரு குற்றச்சாட்டும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை என்றார்.