இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 13 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
உத்தரகாண்ட்டில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசிய அவர், சில ஆண்டுகளில் இந்தியா பெரிய வளர்ச்சி கண்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சி மறுக்கப்பட்டவர்களுக்கு தற்போது நலத்திட்டங்களும் தொழில் வாய்ப்புகளும் கிடைத்துள்ளதாக மோடி கூறினார்.
‘vocal for local’ and ‘local for global’ மந்திரம் மூலம் இந்திய பொருட்களுக்கு உலக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளதாக மோடி கூறினார். இந்திய தயாரிப்புகள் உலகின் வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்தார். நாடு வளர்ச்சி பெற நிலையான ஆட்சி அவசியம் என மக்கள் உணர்ந்துள்ளதை தற்போதைய தேர்தல் முடிவுகள் காட்டுவதாகவும் மோடி தெரிவித்தார்.