மத்திய அமைச்சரவையில் இருந்து நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் படேல் மற்றும் ரேணுகா சிங் ஆகியோர் நேற்று ராஜினாமா செய்தனர். இவர்களின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ ஏற்றுக் கொண்டார்.
அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் அவர்கள் வெற்றி பெற்றதையடுத்து ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையையும், ,மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே உணவு பதப்படுத்தும் தொழில் துறையையும் கூடுதலாக கவனிப்பார்கள்.
மத்திய இணை அமைச்சர்களான ராஜீவ் சந்திரசேகர் ஜல்சக்தித்துறையையும், டாக்டர் பார்தி பிரவீன் பவார் பழங்குடியினர் விவகாரத் துறையையும் கூடுதலாக கவனிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.