ஆக்ரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது என்றும், இந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள எந்தவிதக் காரணமும் இல்லை என்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் மசோதாக்கள் மீதான விவாதத்துக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் பிரதமர் நேரு செய்த இருபெரும் பிழைகளால்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக்குப் போனதாக விமர்சித்திருந்தார்.
இதுகுறித்த சர்ச்சை எழுந்த நிலையில், வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ச்சி விளக்கம் அளித்துள்ளார்.