அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் முதலாவது புல்லட் ரயில் முனையத்தின் வீடியோவைப் ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார்.
சபர்மதி மல்டி மாடல் டிரான்ஸ்போர்ட் ஹப் என பெயரிடப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் நவீன வசதிகளுடனும், இந்திய கலாச்சாரத்தை போற்றிடும் வகையிலும் கட்டப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், மும்பை - அகமதாபாத்தை இடையே சுமார் ஐநூறு கிலோ மீட்டர் தூரம் இரட்டைப் பாதை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை 2026ம் ஆண்டு செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.