ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகளின் மீது உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்க உள்ளது.
ஜம்மு காஷ்மீரையும் லடாக்கையும் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து மத்திய அரசு உத்தரவிட்டது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு அவற்றின் மீதான விசாரணை கடந்த செப்டம்பர்மாதம் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வரும் 11ம் தேதி தீர்ப்பை வழங்குகிறது.