துபாயில் நடைபெறும் உலக பருவநிலை செயல் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி டிசம்பர் முதல் தேதியில் ஐக்கிய அரபு அமீரகம் பயணம் மேற்கொள்கிறார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் ஜயத்தின் அழைப்பை ஏற்று பிரதமர் துபாய் செல்வதாக வெளியுறவு அமைச்சக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டுக்கு இடையே சில நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.
பருவ நிலை சவால்களை ஒன்றிணைந்து சந்திக்க இந்த மாநாடு வாய்ப்பளிப்பதாகவும், ஜி 20 உச்சி மாநாட்டிலும் பருவநிலை பிரச்சினைகள் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.