ராஜஸ்தானில் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறும் 199 தொகுதிகளில் பிரச்சாரம் ஓய்ந்துள்ளது. ஆட்சியை தக்க வைக்க காங்கிரசும், கைப்பற்ற பாஜகவும் தீவிரம் காட்டி வருகின்றன.
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
டியோகர் என்ற இடத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் ஒரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கும் எஞ்சிய 199 தொகுதிகளில் மத்திய ரிசர்வ் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்களைக் கொண்டு செல்லும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்தத் தேர்தலில் 5 கோடியே 25 லட்சம் வாக்காளர்கள் ஜனநாயக உரிமையை செலுத்த உள்ளனர்.