அறிவியல் குரூப்பில், உயிரியல் பாடம் எடுக்காமல், இயற்பியல், வேதியியல் மற்றும் கணித பாடங்களுடன் பிளஸ் டூ தேர்வானவர்களும் மருத்துவம் படிப்பதற்காக வழிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, கூடுதலாக உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்ப பாடங்களுக்கான பிளஸ் டூ தேர்வை அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் தனியாக எழுதி வெற்றி பெற்றால், எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தகுதித் தேர்வை எழுத அனுமதி அளிக்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் கூறியுள்ளது.
புதிய உத்தரவின் மூலம் பிளஸ் டூவில் உயிரியல் பாடத்தை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிக்காதவர்களும் மருத்துவக் கல்வியில் சேர வழி ஏற்பட்டுள்ளது.