டெல்லியில் யூகோ வங்கியின் பயனாளர்கள் கணக்கில் தவறுதலாக 820 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தவறான பரிமாற்றம் காரணமாக பணம் வரவு வைக்கப்பட்டதாகக் கூறியுள்ள வங்கி நிர்வாகம், அதில் சுமார் 79 விழுக்காடு பணத்தை, அதாவது 649 கோடி ரூபாயை IMPS எனப்படும் உடனடியாக செலுத்தும் சேவை மூலம் திரும்பப் பெற்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
மீதமுள்ள 171 கோடி ரூபாயை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் வங்கி நிர்வாகம் கூறியுள்ளது. இந்த தொழில்நுட்பக் கோளாறு என்பது மனிதப் பிழையா அல்லது ஹேக்கிங் முயற்சியா என்பது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.