உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி அருகே சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 40 பேரை மீட்கும் பணி ஐந்தாவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உள்ளே சிக்கியுள்ளவர்களுக்கு உணவு, தண்ணீர், மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. மீட்புப் பணியில் தாய்லாந்து மற்றும் நார்வே நாடுகளைச் சேர்ந்த குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
சுரங்கப்பாதையை அடைத்துள்ள பாறைகளைத் துளையிட்டு வழி ஏற்படுத்தக்கூடிய நவீன கருவி டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகளைப் பார்வையிட்ட மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வி.கே.சிங், சுரங்கத்துக்குள் சிக்கியுள்ளவர்கள் விரைவில் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.