கேரளாவில் 2018-ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட மது என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய குற்றவாளிகளின் மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், சமூகக் கட்டமைப்பு மற்றும் கலாசாரத்தின் மீது குற்றவாளிகள் கறையை ஏற்படுத்திவிட்டதாக கருத்து தெரிவித்தனர்.
பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடியில் கடையில் அரிசி திருடியதாக மது என்ற 27 வயதான மனநலம் பாதிக்கப்ட்ட பட்டியலின நபரை நிர்வாணமாக்கி ஒரு கும்பல் அடித்துக் கொலை செய்தது.
ஆணவக் கொலையாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் மன்னார்காடு பட்டியலின சிறப்பு நீதிமன்றம் 13 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது.