கேரள மாநிலம் பாலக்காடு அருகே மாடு மீது மோதியதால் பயணிகள் விரைவு சிறப்பு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நிலம்புர் ரோடிலிருந்து ஷோரனூர் நோக்கி பயணிகள் விரைவு சிறப்பு ரயில் ஒன்று புறப்பட்டுச் சென்றது.
அந்த ரயில் வள்ளபுழா ரயில் நிலையம் அருகே சென்ற போது தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த மாடு மீது மோதி தடம் புரண்டது.
இந்த சம்பவத்தில் ரயிலில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. விசாரணையில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் என்ஜின் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டு சென்றது தெரிய வந்துள்ளது.