நெல் கொள்முதலுக்கு ஆதார விலையாக 3100 ரூபாய் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை மத்திய பிரதேச தேர்தல் அறிக்கையில் பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், மாநில பாஜக தலைவர் வி.டி.சர்மா ஆகியோர் தேர்தல் அறிக்கையை கூட்டாக வெளியிட்டனர்.
கோதுமைக்கு 2700 ரூபாய் ஆதார கொள்முதல் விலை, ஏழைகளுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இலவச ரேஷன், சமூகத்தில் நலிந்த பிரிவினருக்கு இலவச வீடு, உஜ்வலா திட்டத்தில் 450 ரூபாய்க்கு மானிய விலையில் எரிவாயு சிலிண்டர், 12-ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி, ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு முதுநிலைக் கல்வி வரை இலவசம், அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்துடன் காலையிலும் சத்துணவு, எய்ம்ஸ் போன்று அதிநவீன மருத்துவமனைகள், ஆறு அதிவேக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் பாஜக தெரிவித்துள்ளது.