பஞ்சாப் மாநில அரசு மற்றும் ஆளுநர் என இரு தரப்பினரும் அரசியலமைப்பு சாசனத்தை சீர்குலைக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டிருப்பதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக அம்மாநில அரசு தொடுத்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை ஆளுநர் எப்படி கிடப்பில் போட முடியும் என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், இரு தரப்பும் நெருப்புடன் விளைவாடுவதாக எச்சரித்தது.
நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதன் தீவிரம் புரிகிறதா என பஞ்சாப் ஆளுநரை கேட்ட நீதிபதிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளை ஆளுநர் எவ்வாறு முடக்க முடியும் என்றும் சட்டப்பேரவை அமர்வு முடிக்கப்பட்டதால் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று எப்படி கூற முடியும் எனவும் வினவினர்.