அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கென், பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் இன்று டெல்லியில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், ஜெய்சங்கர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
நள்ளிரவு டெல்லிக்கு வந்த பிளிங்கெனை வெளியுறவு அதிகாரிகள் வரவேற்றனர்.முன்னதாக நேற்று மாலை டெல்லி வந்த லாயிட் ஆஸ்டினை ராஜ்நாத்சிங் நேரில் வரவேற்றார்.
இன்று நடைபெறும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் இந்தோ பசிபிக் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் கனடாவுடன் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் முரண்பாடு குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் வளர்ச்சிமிக்க நாடுகளில் ஒன்றாக இந்தியா வளர்ச்சிபெற ஆதரவு தெரிவிப்பதாகவும், இந்தோ பசிபிக்கில் அமைதியை ஏற்படுத்த இந்தியா ஒரு முக்கியமான கூட்டு நாடாக இருப்பதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.