காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருவதால் பிற மாநிலங்களைச் சேர்ந்த ஆப் அடிப்படையிலான டாக்ஸிகள் நுழைய டெல்லி அரசு தடை விதித்துள்ளது.
காற்று மாசு அதிகரிப்பு காரணமாக வெளியில் இருந்து டெல்லிக்குள் வரும் டாக்ஸிக்களை நிறுத்துமாறு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. மேலும் டெல்லி பதிவெண் கொண்ட வாகனங்கள் மட்டும் இயங்குவதை கண்காணிக்க வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக பேசிய டெல்லி போக்குவரத்துத்துறை அமைச்சர் கோபால் ராய், உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், எல்லையோர மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரும் ஆப்-அடிப்படையிலான டாக்சிகள் குறித்து விரிவான அறிக்கை தயாரிக்க போக்குவரத்துத் துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.