டெல்லியில் காற்றின் மாசு பாதிப்பைப் போக்க வரும் 20 21 தேதிகளில் செயற்கை மழை பொழிய வைக்கப் போவதாக சுற்றுச்சூழல் டெல்லி அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
செயற்கை மழைக்காக கான்புர் ஐஐடி நிபுணர்கள் அளித்த திட்டப்பரிந்துரையை டெல்லி அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அவர்களுடன் கோபால் ராய் ஆலோசனை நடத்தியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் இதற்கான அனுமதியைப் பெறவும் டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது.ஆனால் காற்றில் ஈரப்பதம் இருந்தாலோ மழை மேகங்கள் சூழ்ந்து இருந்தாலோ தான் இத்திட்டம் சாத்தியமாகும் என்றும் கூறப்படுகிறது.