பெண்கள் கருத்தரிப்பை தடுப்பது தொடர்பாக சட்டமன்றத்தில் பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் கூறிய கருத்து கடும் சர்ச்சைக்கு ஆளாகி உள்ளது.
நிதிஷ்குமார் பெண்களின் கண்ணியத்தை கொச்சைப்படுத்துவதாக விமர்சனங்களும் எழுந்து இருக்கிறது. தேசிய மகளிர் ஆணையமும் பெண்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும்படி நிதிஷ்குமாரை வலியுறுத்தி உள்ளது.
அனைத்துப் பெண்களும் உரிய மரியாதையுடனும் கௌரவத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்றும் மகளிர் ஆணையம் வலியுறுத்தி இருக்கிறது.
நிதிஷ்குமாரின் பேச்சு குறித்து விளக்கம் அளித்த துணை முதல்வர் தேஜஸ்வி, பாலியல் கல்வி குறித்து முதலமைச்சர் பேசும் போதுதான் இக்கருத்து தெரிவிக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.