மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்படாத பகுதிகளில் மொபைல் இணைய சேவையை வழங்க அம்மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலவரத்தால் பாதிக்கப்படாத மாவட்டங்களின் தலை நகரங்களில் சோதனை அடிப்படையில் மொபைல் டவர்களைத் திறந்து செயல்படுத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் மொபைல் இன்டர்நெட் டேட்டா சேவைகளை நிறுத்துவது அல்லது கட்டுப்படுத்துவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட, அனைத்து உத்தரவுகளின் நகல்களையும் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக மணிப்பூரில் இனக்கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் முதல் மொபைல் இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.