விடிந்ததும் தேர்தல் நடக்க உள்ள சட்டீஸ்கரில் வாக்குச் சாவடிக்கு மின்னணு எந்திரங்களை கொண்டு சென்ற வாகனத்தை குறி வைத்து கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டது.
நக்சல் ஆதிக்கம் நிறைந்த கான்கேர் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் வாகனத்தில் இருந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர் மற்றும் வாக்குச்சாவடி ஊழியர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.
சட்டீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் முதல்கட்டமாக செவ்வாயன்று 20 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்த தொகுதிகளில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நக்சல் ஆதிக்கமுள்ள இடங்களில் வாக்குச் சாவடி மையங்கள் அருகே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோராமில் மொத்துள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக செவ்வாயன்று தேர்தல் நடைபெறுகிறது. அங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.