சத்தீஸ்கரில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
திருமணம் ஆன பெண்களுக்கு ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய், நெல்லுக்கான ஆதார விலை 3,100 ரூபாய், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 18 லட்சம் வீடுகள், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்பு, நிலமில்லா விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி, 500 மக்கள் மருந்தகம் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை பாஜக அறிவித்துள்ளது.
பாஜக ஆட்சி அமைத்தால் 5 ஆண்டுகளில் சத்தீஸ்கர் வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்றப்படும் என்றும், இது வெறும் தேர்தல் வாக்குறுதி மட்டுமல்ல, சத்தீஸ்கர் மக்களுக்கான உறுதிமொழி என்றும் அமித் ஷா தெரிவித்தார்.