புதுச்சேரி கடலில் உருவாகிய கடல்பாசி நச்சுத்தன்மை வாய்ந்தது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக பாசியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி தலைமைச் செயலகம் முன்பு கடந்த சில நாட்களுக்கு முன்பாக கடல் நீரானது செந்நிறமாக மாறி அதிர்ச்சியும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
இந்த நீர் ஆய்வுக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த அலெக்ஸாண்ட்ரியம் என்ற ஒரு வகை பேரினம் என்பது தெரியவந்துள்ளதாக பாசியியல் ஆராய்ச்சியாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பொதுவாக கிழக்கு கடற்கரை சார்ந்த பகுதிகளில் நச்சுத்தன்மை இல்லாத கடல் பாசிகள்தான் வளரும் என்றும் ஆனால், கடல் மாசு காரணமாக இந்தப் பாசி வளர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.