முந்தைய ஆட்சியாளர்கள் விவசாயிகளுக்கு நலத்திட்டங்கள் எதையும் செயல்படுத்தாமல், விவசாயிகளின் பெயரில் அரசியல் மட்டுமே செய்ததாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஷீரடியில் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய பிரதமர், கடந்த 9 ஆண்டுகளில் 70,000 கோடி ரூபாய் மதிப்பிலான எத்தனாலை அரசு கொள்முதல் செய்துள்ளதாகவும் இதனால் சர்க்கரை ஆலைகள் மற்றும் கரும்பு விவசாயிகள் நேரடியாக பலனடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமது ஆட்சிக்காலத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்ட பண்ணை விளைபொருள்களின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, சீரடி சாய்பாபா கோயிலில் வழிபட்ட பிரதமர் மோடி, புதிதாக கட்டப்பட்டுள்ள தரிசன வரிசை வளாகத்தையும் திறந்து வைத்தார்.