நாட்டைப் பிளவுபடுத்தும் சாதி மற்றும் பிரிவினைவாத சக்திகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
டெல்லியில் ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற தசராவிழாவில் உரை ஆற்றிய பிரதமர் மோடி, அடுத்த ஆண்டு ராம நவமி விழா அயோத்தியில் கொண்டாடப்படும் என்றும் கூறினார்.
சாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்துமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவதை அவர் தமது உரையில் பிரிவினைவாத சக்திகள் என்று குறிப்பிட்டார்.
இயற்கை விவசாயம், டிஜிட்டல் பரிமாற்றம். சுகாதாரம் உள்ளிட்ட பத்து சபதங்களை இத்திருநாளில் மேற்கொள்ளுமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.