இஸ்ரேல்-ஹமாஸ் போரைத் தணிப்பதற்காக பிரதமர் மோடி, பாலஸ்தீன அதிபருடன் நடத்திய பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
அப்போது தீவிரவாதம், வன்முறை, அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஜோர்டான் மன்னருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்காசியாவில் அண்மையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பு மற்றும் மனிதநேய சூழலை உருவாக்குவதன் அவசியத்தையும் ஜோர்டான் மன்னருடன் பகிர்ந்துக் கொண்டதாக பிரதமர் மோடி தமது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.