தெலுங்கானா மாநிலத்தில் எத்தனால் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய கிராம மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.
சித்தனூர் கிராமம் அருகே தனியார் நிறுவனம் ஒன்று எத்தனால் தொழிற்சாலை அமைக்க தேவையான ஏற்பாடுகளை செய்தது மட்டுமின்றி அதற்கு தேவையான இயந்திரங்களையும் நேற்று கொண்டு வந்தது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த நிறுவனத்தை முற்றுகை இட சென்ற போது கிராம மக்களை போலீசார் விரட்டி அடிக்க முயன்றனர். அப்போது ஆவேசம் அடைந்த கிராம மக்கள் கற்கள், கட்டைகள் ஆகியவற்றால் போலீசாரை தாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனம் ஒன்றும் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சிலரை கைது செய்துள்ள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.