காலிஸ்தான் தலைவர் படுகொலை விவகாரத்தால் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மிகவும் கடினமான காலகட்டம் நிலவுவதாக தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கனடாவில் இருந்து விசாக்கள் நிறுத்தப்பட்டதற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.
தற்போதைய கடினமான சூழ்நிலை, கனடாவில் விசா வழங்கும் பணியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பாதுகாப்பானதாக இருக்காது என்று கருதியே, விசாக்கள் வழங்குவது நிறுத்தப்பட்டிருப்பதாக ஜெய்சங்கர் தெரிவித்தார்.
கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பு முக்கியமானது என்று கூறிய அவர் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் மீண்டும் விசாக்கள் வழங்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.