மணிப்பூரில் இணையசேவைக்கான தடை வரும் 26 - ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாநில காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில், சில சமூக விரோதிகள் சமூக ஊடகங்கள் மூலம் கலவரத்தைத் தூண்டும் வகையில் படங்கள், பேச்சுக்கள், வீடியோக்களைப் பரப்பலாம் என அச்சம் நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதனால் வதந்திகள் பரவி பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலும், சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படும் ஆபத்தும் உள்ளதாலும், இணைய சேவைக்கான தடையை நீட்டிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையேயான மோதல் காரணமாக கடந்த மே மாதம் முதல் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.