இந்தியாவுடனா கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் சீனா தனது ராணுவ பலத்தை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
சீனாவின் ராணுவ பலம் தொடர்பாக பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 3488 கிலோமீட்டர் நீள கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களை அதிக எண்ணிக்கையில் பணியமர்த்துவதுடன், தரையடி சேமிப்புக் கிடங்குகள், சாலைகள், கிராமக் குடியிருப்புகள், விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் உள்ளிட்ட பணிகளிலும் சீனா தீவிரம் காட்டிவருவதாகத் தெரிவித்துள்ளது.
தற்போது சீனாவிடம் 500-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் உள்ளதாகவும் அந்த எண்ணிக்கையை 2030-ஆம் ஆண்டுக்குள் ஆயிரமாக அதிகரிக்கவும் முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பென்டகன் தெரிவித்துள்ளது.