கைலாஷ் உள்ளிட்ட பனிமலை கோவில்களுக்குச் செல்ல முடியவில்லை என்று நடிகர் அமிதாப் பச்சான் கவலை வெளியிட்டிருந்தததை அடுத்து அவருக்கு நல்ல யோசனைகளை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.
கைலாஷ் உள்ளிட்ட பனி மலைக் கோவில்களுக்குச் செல்ல வேண்டும் என்ற தமது நீண்ட நாள் ஆசையை எக்ஸ் வலைதளத்தில் வெளிப்படுத்தி இருந்த அமிதாப் பச்சன் தமது தமது வயதின் காரணமாக மவுண்ட் கைலாஷ் செல்ல இயலவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.இதற்கு எக்ஸ் வலை தளத்தில் பதில் அளித்த பிரதமர் மோடி, அண்மையில் பார்வதி குண்ட் மற்றும் ஜாகேஸ்வர் கோவில்களுக்கு தாம் சென்று வந்த அனுபவத்தை விவரித்துள்ளார்.
மிகவும் உள்ளத்தைக் கவர்ந்த பயணம் அது என்றும் பிரதமர் கூறியுள்ளார். குஜராத் மாநிலத்தில் ரன் உத்சவ் விழா தொடங்கியுள்ள கட்ச்சுக்கு சென்றுவருமாறு அமிதாப்புக்கு யோசனை தெரிவித்து உள்ள பிரதமர் மோடி, வடோதராவில் உள்ள ஒற்றுமை சிலையைக் காணுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.