விஞ்ஞானிகளுக்கு ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்துவது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐஐடிகளில் பணிபுரியும் விஞ்ஞானிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது குறித்து கருத்து கேட்டு 14 சுயநிதி நிறுவனங்களுக்கு அரசுத் தரப்பில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது பெரும்பாலான பல்கலைக்கழகங்களின் விஞ்ஞானிகளுக்கு ஓய்வு பெறும் வயது 60 ஆக உள்ளது. ஓய்வு பெறும் வயதை நெருங்கும் விஞ்ஞானிகளின் சேவையைத் தொடர ஓரிரு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கும் வழக்கம் இருந்து வந்தது.