சீன சரக்குக் கப்பலில் இருந்த மாலுமி ஒருவருக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவரை உடனடியாக இந்தியக் கடலோரக் காவல் படையினர் மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
மேற்கு கடலோரப் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த MT Hua Wei என்ற சீன நாட்டுக் கப்பலில் இருந்து மருத்துவ அவசர நிலைக்கு உதவுமாறு இந்திய கடலோர காவல் படைக்கு கோரிக்கை வந்தது.
இதையடுத்து கப்பலில் நடுக்கடலுக்குள் சென்ற இந்திய கடலோர காவல் படையினர் அந்த கப்பலில் இருந்த 49 வயது நபரை துறைமுகத்துக்கு அழைத்து வந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.